நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து: மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழப்பு!

இலங்கை: நேற்று காலை வேளையில் ஹுரிகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்நேவ – தம்புத்தேகம வீதியின் 30 ஆம் கல் தூண் அருகே உள்ள கிளை வீதியில் நாமல்கமுவ திசையை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் குறுக்கே பாய்ந்த நாயைக் காப்பாற்ற முயன்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மீகலேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கலாங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் எனத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து ஹுரிகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Bootstrap