இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளப் பாதிப்பால் இதுவரை சுமார் 3.32 இலட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.9 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.