கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் டொராண்டோ மேயர் தேர்தலில் போட்டி

கனடாவின் முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி அமைச்சரான கிறிஸ் அலெக்சாண்டர் , டொராண்டோ மேயர் தேர்தலில் போட்டியிட அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார்.

டொராண்டோ மாநகரம் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் தேங்கி நிற்பதாகக் கூறி, அதை மீட்டெடுக்க ஒரு 'வெளிநாட்டவர்' (Outsider) தேவை என்ற முழக்கத்துடன் அவர் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பரின் கன்சர்வேடிவ் அரசாங்கத்தில் (2013-2015) குடியுரிமை மற்றும் குடிவரவு அமைச்சராகப் பணியாற்றினார். மேலும், ஆப்கானிஸ்தானுக்கான கனடாவின் தூதராகவும் இருந்துள்ளார்.டொராண்டோ மாநகர மேயர் தேர்தல் அக்டோபர் 26 அன்று நடைபெற உள்ளது. தற்போதைய மேயர் ஒலிவியா சௌ மற்றும் நகரக் கவுன்சிலர் பிராட் பிராட்போர்ட் ஆகியோருடன் இவர் போட்டியிடுகிறார்.

இந்தத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி கிறிஸ் அலெக்சாண்டரையும் சேர்த்து 30-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். மேயர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 21 ஆகும்.

Bootstrap