பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 29ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கும் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.