ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

ஜோர்டானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த கப்பல்கள் மீது செவ்வாய்க்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதையடுத்து, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா இணைந்து நடத்தியதாக அறிவிக்கப்பட்ட முதல் வெளிப்படையான கூட்டுத் தாக்குதல்களின் பின்னர், பிராந்திய மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தபோது, இந்தப் போர் சில வாரங்களில் முடிவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

எனினும், அந்த மோதல் பல மாதங்களாக தொடர்ந்துவருவதால், மத்திய கிழக்கில் பதற்ற நிலை மேலும் அதிகரித்துள்ளது.

Bootstrap