2026 உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடர்: அர்ஜென்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை

2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடரின் போது இடம்பெற்ற பல விதிமீறல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக, அர்ஜென்டினா காற்பந்து சங்கம் (AFA) மற்றும் வீரர்கள் மீது சர்வதேச காற்பந்து சம்மேளனம் ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் 'லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்' ('ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானது') என்ற வாசகம் அடங்கிய பதாகையைக் காட்சிப்படுத்தினர்.

இதனையடுத்து,விளையாட்டு நிகழ்வுகளை விளையாட்டு அல்லாத அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்குப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஒழுங்குமுறை விதியை இந்தச் செயல் மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர் முழுவதும் அர்ஜென்டினா அணி போட்டிகளின் போது பாகுபாடு காட்டும் கோஷங்கள் மற்றும் சைகைகள், போட்டிகள் தாமதமாகத் தொடங்கப்பட்டமை, பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியமை மற்றும் ரசிகர்கள் மைதானத்திற்குள் பொருட்களை வீசியமை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஸ்பெயின் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கூடுதல் நேரத்தில் 0-1 எனத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மைதானத்தில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பாகவும் தனியாக ஒழுங்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap