ஹவாயில் தீவிரமடையும் இயற்கைச் சீற்றம்!

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் அமைந்துள்ள, உலகின் மிகவும் செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றான கிலாவுவே (Kīlauea) மீண்டும் சீற்றமடைந்துள்ளது.

எரிமலையின் துளையிலிருந்து சுமார் 500 அடி உயரம் வரை எரிமலைக் குழம்பு (லாவா) பீறிட்டு வெளியேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிமலைச் செயல்பாடு தொடர்ந்து நீடித்து வருவதால், அப்பகுதியில் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்கள் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எரிமலையின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன், நிலைமையை உன்னிப்பாக மதிப்பீடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap