மகள் தேர்ந்தெடுத்த எண் - லொட்டரியை வென்ற அப்பா

சென்னையைச் சேர்ந்த 44 வயதான கஜினிமுகமது பஹருதீன், கடந்த 24 ஆண்டுகளாக குடும்பத்துடன் ஷார்ஜாவில் வசித்து வருகிறார்.

இவர் 2019 முதல், கடந்த 7 ஆண்டுகளாக பிக் டிக்கெட் லொட்டரி வாங்கி வருகிறார்.

பொதுவாக லொட்டரி எண்களைத் தாமாகத் தேர்ந்தெடுக்கும் கஜினிமுகமது, இந்த ஜூலை மாத குலுக்கலுக்காகத் தனது 2 வயது மகள் தேர்ந்தெடுத்த எண்களைக் கொண்டு லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

மகளின் அதிர்ஷ்ட எண்ணே இவருக்கு இந்த பெரிய பரிசுத் தொகையைப் பெற்றுத் தந்துள்ளது.இந்த எதிர்பாராத வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கஜினிமுகமது, இந்த பரிசுத் தொகையை எவ்வாறு பயனுள்ள முறையில் செலவிடுவது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Bootstrap