2014 ஆம் ஆண்டு, ஸ்பெயினைச் சேர்ந்த எரிக் ஓர்டிஸ் குரூஸ் என்ற 10 மாதக் குழந்தைக்கு 'கார்டிகல் டிஸ்ப்ளாசியா' (Cortical Dysplasia) என்ற அரிய வகை மூளை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த குழந்தைக்கு ஒரு நாளைக்கு 30 முறைக்கு மேல் கடுமையான வலிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தான நிலை உருவானது. குழந்தையைக் காப்பாற்ற உடனடியாக அவசர மூளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதற்கு ($83,000) வரை பெருந்தொகை தேவைப்பட்டது. அவ்வளவு பணத்தைத் திரட்ட முடியாமல் குழந்தையின் ஏழைக் குடும்பத்தினர் தவித்தனர்.
உதவி கேட்ட பெற்றோர்:
ரொனால்டோவின் கால்பந்து ஜெர்சி மற்றும் காலணிகளைப் பெற்று, அதை ஏலம் விட்டுப் பணம் திரட்டலாம் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் ரொனால்டோவை அணுகினர்.
ரொனால்டோவின் பெருந்தன்மை:
இந்த சோகக் கதையைக் கேட்ட ரொனால்டோ, வெறும் ஜெர்சியை மட்டும் தராமல், அந்த குழந்தையின் முழு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
அதன்படி, அறுவை சிகிச்சைக்குத் தேவையான முழுப் பணத்தையும் வழங்கினார். ரொனால்டோவின் இந்த பெரும் நிதியுதவியால் அந்த குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழந்தையின் உயிரும் காப்பாற்றப்பட்டது..
கிறிஸ்டியானோ ரொனால்டோ ?
'நான் சின்ன வயசா இருக்கும்போது, நாம மத்தவங்களுக்குக் கொடுத்தா கடவுள் நமக்கு அதைவிட இரண்டு மடங்கா திருப்பிக் கொடுப்பார்னு எப்பவும் படிச்சிருக்கேன். என் வாழ்க்கையிலேயும் அதுதான் நடக்குது. நான் அதைச் செய்யத் தொடங்குனதுல இருந்து என் வாழ்க்கையில எல்லாமே ரொம்ப நல்லபடியா மாறிட்டே இருக்கு. அதனால நான் தொடர்ந்து அதைச் செய்வேன், ஏனென்றால், அது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அதைச் செய்யும்போது என் மனதிற்கு மிகுந்த நிறைவாகவும் இருக்கிறது.' ?❤️