உணவு பரிமாற தாமதம்!. சகோதரர் மனைவி தலையை வெட்டி மரத்தில் மாட்டிய நபர்!...

உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது சகோதரரின் மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார் மாநிலம் ஜகர்கன்ட் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குனல் குமார், தர்மேந்திர குமார் ஆகிய இருவரும் சகோதரர்கள். இதில் தர்மேந்திர குமாரின் மனைவி அனுஷா தேவி(25).

குனல் குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு குனல் குமார் மதுபோதையில் சாப்பிட சென்றபோது, அனுஷா தேவி அவருக்கு சாப்பாடு போடவில்லை என சொல்லப்படுகிறது. நீண்ட நேரம் சாப்பாட்டுக்காக காத்திருந்ததில் கோபமடைந்த குனல் குமார் அனுஷா தேவியின் தலையில் கோடாரியால் அடித்து கொலை செய்துள்ளார்.

அதன்பின் அனுஷா தேவியின் தலையை வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்க விட்டார். இதையடுத்து குனல் குமாரை போலீசார் கைது செய்து இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள்.

Bootstrap