ஈரானை பாராட்டும் புதின்!...

ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதத்தில் போரை தொடங்கின. நான்கு மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில் அமெரிக்காவுக்கு ஈரானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆனால் ஹார்மூஸ் நீரிணை வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை ஈரான் தாக்கியதால் கோபமடைந்த அமெரிக்கா ஈரானின் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியது. ஆனால், கடந்த 2 வாரங்களுக்கும் மேல் அமெரிக்கா ஈரான் மீது எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. எனவே இரண்டு நாடுகளுக்கும் இடையே விரைவில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்நிலையில் ஈரானின் அதிநவீன கொசுப்படை (Mosquito Fleet) ராணுவ கட்டமைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டி பேசியிருக்கிறார். கொசுப்படை என்பது அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் ஏந்திய மிகச்சிறிய அதிவேக படகுகளை கொண்ட ஒரு கடற்படை பிரிவாகும்.

பெரிய போர்க்கப்பல்கள் போல் இல்லாமல் இந்த சிறிய படகுகள் எதிரிகளின் கண்களில் படாமல் மிகவும் வேகமாக சென்று கொசுக்களை போல கூட்டமாக தாக்கும் திறன் கொண்டவை. இதைத்தான் புதின் பாராட்டி பேசியிருக்கிறார்.

இந்த கொசுப்படை நவீன கால போர் தொழில்நுட்பத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.. ஈரானை போல ரஷ்யாவும் தற்போது அதிக ஆயுத பலம் கொண்ட சிறிய ரக படகுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது' என கூறியிருக்கிறார்.

Bootstrap