பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை விவகாரம் - நால்வருக்கு மீண்டும் விளக்கமறியல்

கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலிருந்து உடலியல் சிகிச்சை நிபுணர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நால்வரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று (30) நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கமைய, பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் அவருக்கு உதவி வழங்கியதாகக் கூறப்படும் இருவர் உள்ளிட்ட நால்வரும் எதிர்வரும் 03ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாரம்மல பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, கொலைக்கு உதவியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி மற்றும் குண்டசாலை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொலிஸ் பரிசோதகர் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

Bootstrap