மகனை தூக்கி கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ்!..

நடிகரும், பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமான நிலையில் சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரியும் ஜாய் கிரிசில்டா என்பருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டார்

.

ஆனால், தான் கர்ப்பமாக இருக்கும் நிலையில் ரங்கராஜ் தன்னை ஏற்றுக்கொள்ளவும், சந்திக்கவும் மறுப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்த ஜாய் கிரிசில்டா கண்ணீரோடு செய்தியாளர்களிடமும் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.. மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

ரங்கராஜோ 'அந்த குழந்தைக்கு நான் தந்தை இல்லை' என நீதிமன்றத்தில் கூறினார். எனவே டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிடப்பட்டது. சோதனையில் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என்பது உறுதியானது.

இந்நிலையில், தனது மகன் ராகாவை தூக்கி கையில் வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாதம்பாட்டி ரங்கராஜ் 'என் மகன் ராகாவிற்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழு பொறுப்புடன் அன்புடன் செய்து வருகிறேன். இனி என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜனின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழு பொறுப்புடனும்,அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

ரங்கராஜனின் இந்த முடிவை பலரும் வரவேற்று அவருக்கு பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்.

Bootstrap