பாக்கிஸ்தான் பனிச்சரிவு - பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் உட்பட 10 பேர் மாயம்!

வட பாக்கிஸ்தானில் உள்ள காரகோரம் மலைத்தொடரில், உலகின் 12ஆவது மிக உயர்ந்த சிகரமான 'பிராட் பீக்' (8,047 மீட்டர் உயரம்) மலையில் நேற்று ( 30) ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா (நிம்ஸ் டாய்) தலைமையிலான 10 பேர் கொண்ட சர்வதேச மலையேற்றக் குழு மாயமாகியுள்ளது.

ஆல்பைன் கிளப் ஆஃப் பாகிஸ்தான் அமைப்பின் துணைத் தலைவர் கர்ரார் ஹைதரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காணாமல் போன குழுவில் பின்வருவோர் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

5 நேபாள மலையேற்ற வீரர்கள் (தலைவர் நிம்ஸ் டாய் உட்பட)

சோஹைல் சகி (பாகிஸ்தான் - ஹன்சா பகுதி, நதிரா (ஓமன்) மல்லோரி கெய்ஸ் (அமெரிக்கா)

வாங் (சீனா) மேலும் ஒரு வெளிநாட்டு மலையேற்ற வீரர் ஆகியோர் அடங்குவர்.

பனிச்சரிவுக்குப் பிறகு மலையேற்ற வீரர்களுடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளை விரைவுபடுத்த ஆல்பைன் கிளப் அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் இர்பான் அர்ஷத் மற்றும் மூத்த நிர்வாகிகள் அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

வானிலை சீரடைவதைப் பொறுத்து, ஹெலிகொப்டர்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் மூலம் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆவணப்படம் மூலம் உலகப்புகழ் பெற்ற நிர்மல் புர்ஜா, 2019-ஆம் ஆண்டில் உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் வெறும் 189 நாட்களில் ஏறி உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bootstrap