நாட்டில் ஜூன் மாதத்திலிருந்து எதிர்வரும் ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் 10 முதல் 15 இலட்சம் வரையான மக்களுக்கு போதுமான போஷாக்குணவு வேளையை பெற்றுக்கொள்ள மனிதாபிமான உதவி தேவைப்பாடு ஏற்படுமென யூ.எஸ்.எய்ட் அமைப்பின் உதவியின் அடிப்படையில் செயற்படும் வறுமை தொடர்பான முன்னெச்சரிக்கை அமைப்புகளின் வலையமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தேவைப்பாடு சந்தையின் அடிப்படையில் செயற்படுவதை விட எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அதிகரிக்கலாமென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரிக்கும் உணவு விலைக்கு ஈடாக நாட்டின் அநேகமான மக்களுக்கான சம்பள அதிகரிப்பு இடம்பெறவில்லை என்றும் அந்த வலையமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதார நெருக்கடி இடம்பெற்ற காலப்பகுதிக்கு ஈடாக நகரம் மற்றும் நகரை அண்மித்த மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை தற்போது வரையில் தோற்றம் பெற்றிருந்தாலும், அதிகரித்துள்ள உணவு விலை, போக்குவரத்து கட்டணம், மின் மற்றும் நீர்க் கட்டணம் உள்ளிட்ட கடன் மீள் செலுத்துகைக்கான அர்ப்பணிப்புக்கு ஈடான அந்த தொழில்களின் சம்பள அதிகரிப்பு ஏற்படவில்லையென வறுமை தொடர்பான முன்னெச்சரிக்கை அமைப்புகளின் வலையமைப்பு தெரிவித்துள்ளது.
குறைந்த நாள் சம்பளம் மற்றும் வறுமையான குடும்பங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத உணவு விலையின் காரணமாக ஒருசில வறுமையான குடும்பப் பசியை போக்கிக்கொள்வதற்காக பெற்றுக்கொள்ளப்படும் உணவு அளவை குறைத்து கொள்வதற்கு, அத்தியாவசியமற்ற பொருட்களுக்காக முன்னெடுக்கப்படும் செலவை குறைக்க நேர்ந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
யூ.எஸ்.எய்ட் அமைப்பின் உதவியில் 1985ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ள நிவாரணம் தொடர்பில் முழு முன்னெச்சரிக்கை விடுக்கும் கட்டமைப்பு வலையமைப்பு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாகும். இதுதொடர்பில் அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது, போக்குவரத்து செலவு, விவசாய உற்பத்தி செலவு மற்றும் மீன்பிடி தொழிற்றுறைக்கு அவசியமான செலவுகள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து நாட்டின் உணவு விலை அதிகரித்துள்ளதால் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையின் அநேகமான குடும்பங்களின் கொள்வனவு சக்தி வரையறுக்கப்பட்டுள்ளது.
குறைந்த சம்பளம், அதிக கடன் சுமை, அதிக உணவுச் செலவு மற்றும் சந்தையின் அடிப்படையிலான செயற்பாடுகளின் காரணமாக நாட்டின் குடும்பங்களின் கொள்வனவு வாய்ப்பு குறைந்துள்ளதால் அதன் காரணமான உணவு அல்லாத பொருட்களுக்காக நிதி செலவு செய்வது இலங்கை மக்களுக்கு கடினமான விடயமாகும்.
ஈர வலயத்திலுள்ள குறைந்த வருமானம் கொண்ட விவசாயிகள், மீனவர் சமூகம் மற்றும் வறுமைக்கோட்டில் வாழும் மக்கள் அதிக ஆபத்து நிலையிலுள்ளவர்களாக கருதப்படுகிறார்கள்.
அவசர உணவு உதவியை வழங்கும் பாரியளவான வேலைத்திட்டம் இலங்கையில் செயற்பாட்டில் இல்லை. எதிர்காலத்தில் இலங்கையின் ஈரவலய பிரதேசங்களுக்கு உணவுப் பாதுகாப்பு தொடர்பில் அதிக ஆபத்தும் வடமேல் மற்றும் வடக்கு கரையோரப் பிரதேசங்கள் மற்றும் நகர மற்றும் நகரை அண்மித்த மாவட்டங்களில் வாழும் மக்கள் அதிக அச்சுறுத்தலை சந்திப்பார்கள் என்றும் அதில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.