கனடாவில் பெண்ணொருவர் மாயமான நிலையில், அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் மன நல மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Lévis நகரில், சுஷ்மிதா பாஸ்கரன் (51) என்னும் பெண் காணாமல் போனதாக கடந்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 22ஆம் திகதி பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மற்றும் Lévis பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசாரணையில், வனப்பகுதி ஒன்றில் பெண்ணொருவரின் உயிரற்ற உடல் கிடப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, Lévis இலுள்ள வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல் சுஷ்மிதாவுடையதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
சுஷ்மிதா வழக்கு தொடர்பில், பொலிசார் மார்ட்டின் கேரியர் (61) என்பவரைக் கைது செய்துள்ளார்கள். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கேரியர் மன நல மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கேரியருக்கு ஏதாவது மன நல பாதிப்பு உள்ளதா, அதனால் அவர் செய்த குற்றச்செயல்களுக்கு அவர் பொறுப்பா இல்லையா என்பதை அறிவதற்காக இந்த மதிப்பீடு செய்யப்பட உள்ளது.