இல்லாத சம்பவத்துக்குப் படம் போடும் வேலை.Google Earth சர்ச்சைக்குரிய அம்சம் நீக்கம்

Google Earth தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய அம்சம் நீக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களை உருவாக்கும் அம்சம் நேற்று முன்தினம் (ஜூலை 30) அறிமுகம் கண்டது.

சாங்கி விமான நிலையம் சேதமுற்றது,

கரையோரப் பூந்தோட்டத்தில் தீ மூண்டது,

மரினா பே சாண்ட்ஸ் அருகே பாலம் இடிந்தது,

இப்படி ஏதேனும் ஒரு வாக்கியம் போதும். நடக்காத சம்பவங்களை உண்மை நிகழ்வுகளைப் போல் காட்சிப்படுத்த முடிந்தது.

தத்ரூபமான காட்சிகளைத் தயாரிக்கத் துணைக்கோளப் படங்கள் பயன்படுத்தப்பட்டன.

Google Earth நிறுவனம் வேறு நோக்கத்துடன் அம்சத்தை அறிமுகப்படுத்தியதாகத் தெரிகிறது.

உதாரணத்திற்கு ஒரு புதிய குடியிருப்பு வட்டாரம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து திட்டமிட அம்சம் உதவும் என்று Google தெரிவித்தது.

ஆனால் புதிய சேவையின் மூலம் பொய்த்தகவல் எளிதாகவும் வேகமாகவும் பரவ வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் சாடினர்.

கண்டனங்கள் எழுந்ததும் ஒரே நாளில் Google நிறுவனம் புதிய அம்சத்தை மீட்டுக்கொண்டது.

Bootstrap