இலோன் மஸ்க் போலவே இருக்கும் சமையல்காரர் - இணையத்தைக் கலக்குகிறார்

 

சீனாவில் பார்பிக்யூ (barbecue) உணவகம் நடத்தும் சமையல் நிபுணர் ஒருவர், தொழிலதிபர் இலோன் மஸ்க்கைப்  போலவே இருப்பதால் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறார்.

சீனாவின் ஷான்சி  மாநிலத்தைச் சேர்ந்த 48 வயதான மா ஜியன்பிங் (Ma Jianping) BBQ உணவகத்தை இணைந்து நடத்தி வருகிறார்.

ஜூலை 26ஆம் தேதி உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் அவரது காணொளி டௌயின் (Douyin) தளத்தில் வெளியானது.

அவரது தோற்றம் இலோன் மஸ்க்கைப் போல் இருப்பதாக வாடிக்கையாளர்கள் ஏற்கனவே கூறியிருக்கின்றனர்.

அவரது குடும்பப் பெயரான 'மா' சீன மொழியில் மஸ்க்கின் பெயரை ஒத்திருப்பதும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரபலமான பிறகு அமைதியாக இருந்த அவரது உணவகத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் கைகுலுக்கவும் மட்டுமே வருவதாக மா கூறினார்.

Bootstrap