காஸாவில் ஆயுதங்களைக் கைவிட ஹமாஸ் சம்மதம்

காஸாவில் ஆயுதங்களைக் கைவிட ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காஸா அமைதித் திட்டத்தை அறிவித்த பிறகு ஹமாஸ் அவ்வாறு கூறியது.

ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடுவது, இஸ்ரேல் அதன் துருப்புகளை மீட்டுக்கொள்வது, காஸாவில் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்துலகப் படை ஒன்றை நிறுவுவது, காஸாவுக்கு அதிகமான மனிதாபிமான உதவி வழங்குவது ஆகியவை திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.

ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட்டால், அதை ஆட்சிபுரிய புதிய பாலஸ்தீன அரசாங்கம் உருவாகும் என்ற நம்பிக்கை பிறக்கும் என்று  டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட தேசிய காஸா நிர்வாகக் குழுவிடம், ஹமாஸின் ஆயுதங்கள் ஒப்படைக்கப்படும்.

ஹமாஸின் ஆயுதக் களைவு நிறைவடைந்தவுடன் இஸ்ரேல் காஸாவிலிருந்து படைகளை மீட்டுக்கொள்ளும் என்று  டிரம்ப் தெரிவித்தார்.

இஸ்ரேல் சொன்னபடி செய்வது உறுதிசெய்யப்படவேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியது.

Bootstrap