உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் தனியார் முதலீட்டுத் திட்டத்தை FIFA முன்னெடுத்தால் அதன் போட்டிகளைப் புறக்கணிக்கப் போவதாக UEFA எனும் ஐரோப்பியக் காற்பந்து நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
தனது 55 உறுப்பு நாடுகளும் ஒருமனதாக அந்த முடிவை எடுத்திருப்பதாக UEFA கூறியது.
உலகக் காற்பந்துப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியை ஒருபோதும் முதலீட்டுப் பொருளாகக் கருதக் கூடாது என்றும் UEFA வலியுறுத்தியது.
வட,மத்திய அமெரிக்க நாடுகளை பிரதிநிதிக்கும் CONCACAF அமைப்பும் FIFA வின் தனியார் முதலீட்டுத் திட்டத்தை நிராகரித்துள்ளது.
உலகக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய போட்டிகளை ஏற்றுநடத்த ஒரு வர்த்தகக் கிளை நிறுவனத்தை அமைக்க FIFA திட்டமிடுகிறது.
FIFA Forward Enterprise என்பது அந்த புதிய கிளை நிறுவனத்தின் பெயர்.