150 ஆண்டுகளுக்குப் பிறகு நூலகத்துக்கு திரும்பிய நூல்.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இரவல் எடுத்துச் செல்லப்பட்ட நூல் ஒன்று இறுதியாக நூலகத்துக்குத் திரும்பியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கியாமா  பொது நூலகத்தில் இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

1858ஆம் ஆண்டு வெளியான 'Antiquities of Athens' என்ற நூல் கடந்த வாரம் நூலகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

வீட்டைச் சீரமைக்கும் பணியின்போது மூடப்பட்டிருந்த நெருப்பிடத்தில் செங்கற்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட தேயிலைப் பெட்டியில் அந்த நூல் கிடைத்ததாக அதைக் கண்டுபிடித்தவர் தெரிவித்தார்.

நூலகம் 1872ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போது நடைமுறையில் இருந்த விதிகளின்படி நூலைத் தாமதமாகக் கொடுப்பதற்கான கட்டணம் இன்றைய பண மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 28,000 ஆஸ்திரேலிய டாலர்  என்று நூலக நிர்வாகி கூறினார்.

ஆனால் அந்த நூலை இறுதியாக இரவல் எடுத்தவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதற்கான பதிவேடு காணாமல் போனது.

'இந்த நூலை மீண்டும் இரவலாகக் கொடுக்க மாட்டோம். அதைத் திரும்பப் பெற இன்னொரு 150 ஆண்டுகள் காத்திருக்க விரும்பவில்லை,' என்று அவர் வேடிக்கையாகக் கூறினார்.

சிறிதளவு சேதமடைந்துள்ள அந்த நூல் இனி நூலகத்தின் வரலாற்றுச் சேகரிப்பில் காட்சிக்கு வைக்கப்படும்.

Bootstrap