பொலிவூட்டின் பிரபல நடிகரான சல்மான் கான், தமது இளமைத் தோற்றத்தைப் பராமரிப்பதற்காகச் செய்யும் சிகிச்சைகள் குறித்து அவரது நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான சைலேந்திர சிங் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
60 வயதிலும் இளமையாகத் தோற்றமளிக்கும் சல்மான் கான், முடி உதிர்வைத் தடுப்பதற்காகவும் தலைமுடி அடர்த்தியாக இருப்பதற்காகவும் பிளேட்லெட்-ரிச் பிளாஸ்மா (PRP சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்துப் பேசிய சைலேந்திர சிங், 'ஒரு நாள் தான் சல்மான் கானின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் சாப்பாட்டு அறையில் கண்ணாடிக்கு முன்பாகச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரது தலையிலும் நெற்றியிலும் பல ஊசிகள் குத்தப்பட்டிருந்தன.
அந்த வலியையும் பொருட்படுத்தாமல், அவர் மிகவும் இயல்பாகச் சிக்கன் பிரியாணி சாப்பிட்டவாறே அனைவருடனும் பேசிக் கொண்டிருந்தார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இளமைத் தோற்றத்தையும் உடலமைப்பையும் தக்கவைத்துக்கொள்ள சல்மான் கான் இதுபோன்ற பல கடினமான மருத்துவச் சிகிச்சைகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.