2027 'எஸ்சிஓ' மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்

ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்சிஓ) சுழற்சி முறை தலை​மை​யின் அடிப்​படை​யில், 2027-ம் ஆண்டுக்கான வரு​டாந்​திர மாநாட்டை நடத்​தும் பொறுப்பை பாகிஸ்தான் பெற்​றுள்​ளது.

இந்த அமைப்​பில் இந்​தி​யா, சீனா, ரஷ்​யா, பாகிஸ்​தான், கஜகஸ்தான், கிர்​கிஸ்​தான், தஜிகிஸ்​தான், உஸ்​பெகிஸ்​தான், ஈரான் மற்​றும் பெலாரஸ் ஆகிய 10 நாடு​கள் இடம் பெற்​றுள்​ளன.

இந்த நிலை​யில்இ இஸ்​லா​மா​பாத்​தில் நடை​பெற்ற செய்தியாளர்கள் சந்​திப்​பில், பாகிஸ்​தான் வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் கூறிய​தாவது, எஸ்சிஓ உச்சி மாநாட்டை நடத்​தும் பொறுப்பை ஏற்​கும் நாடு, அமைப்​பின் அனைத்து உறுப்பு நாடு​களின் தலை​வர்​களுக்​கும் அழைப்பு விடுப்​பது கடமை​யாகும்.

அந்த வகை​யில், அமைப்​பின் விதி​முறை​கள், மரபு​களைப் பின்பற்றி, இந்​தி​யப் பிரதமர் உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் தலை​வர்​களுக்​கும் அழைப்​பிதழ்​கள் அனுப்​பப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்த மாநாட்​டில் இந்​தி​யப் பிரதமர் பங்கேற்​பது தொடர்​பான முடிவு​கள், அழைப்​பிதழ் அனுப்​பப்​பட்ட பின்​னரே பரிசீலிக்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Bootstrap