மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை கண்காணித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ஹெலிக்கொப்டர் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) களமிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள கட்டிடமொன்றில் இன்று (01) பிற்பகல் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலையின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) மற்றும் விமானப்படையினர் இணைந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.