மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து ராகம பொலிஸ் பிரிவில் உடனடியாக அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் குறித்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி - மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181 ஜி - தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலும், மறு அறிவிப்பு வரும் வரையிலும் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.