ரத்மலானையில் துப்பாக்கிச்சூடு - காயமடைந்தவர் உயிரிழப்பு

ரத்மலானை கந்தாவல வீதிப் பகுதியில் இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உடனடியாக களுபோவில போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Bootstrap