அமெரிக்காவுடனான ஈரானின் அதிகரித்து வரும் பதற்ற நிலைமைகள் குறித்து, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் உத்தியோகபூர்வ சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 'அமெரிக்க இராணுவத்தின் எந்தவொரு சாகச நடவடிக்கைகளுக்கும்' எதிராக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் தனது 'தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு' ஆகியவற்றுக்கு பாதுகாப்பளிக்கத் தயாராக உள்ளது என்றும், 'எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கும்' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.