தாக்குதலை ஒத்திவைக்க ஈரான் கோரிக்கை - டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரானுக்கு எதிராக மிகப்பெரும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்கா தயார் நிலையில் உள்ள போதிலும், முக்கிய உடன்படிக்கைகளுக்காக தாக்குதலைத் தற்காலிகமாக தாமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு மிகப்பாரிய அளவிலான இராணுவப் பலத்துடன் ஈரானை எதிர்கொள்ள அமெரிக்கா ஆயத்தமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஈரான் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கைகள் வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை திறப்பது,அணுசக்தி அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டுவருவது குறித்த ஒப்பந்தத்திற்காக, தாக்குதலை தாமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Bootstrap