அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 03 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் உள்ள 'ட்வின் ஃபால்ஸ்' நகரின் வணிக வளாகப் பகுதியில் சனிக்கிழமை (01) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிக வளாகப் பகுதியில் துப்பாக்கிதாரி திடீரெனத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன.

இத்தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரியும் உயிரிழந்துவிட்டதாக ட்வின் ஃபால்ஸ் பொலிஸ் உயர் அதிகாரி மெத்யூ ஹிக்ஸ் அந்நாட்டு ஊடகவியலார்களிடம் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிதாரி உயிரிழந்துவிட்டதால், அப்பகுதி பொதுமக்களுக்கு இருந்த அச்சுறுத்தல் மற்றும் ஆபத்து முற்றிலும் நீங்கிவிட்டதாகப் பொலிஸ் உயர் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் அந்நாட்டு பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

Bootstrap