தென்கொரியாவில் இன்று (2 ஆகஸ்ட்) வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.
யாங்சான் (Yangsan) நகரில் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
தென்கொரியாவில் நூறாண்டுக்கு முன்பு வெப்பநிலைப் பதிவு தொடங்கியது முதல் இதுவே ஆக அதிக வெப்பம்.
யாங்சான் நகரம், தலைநகரிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
அந்நகரில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வெப்பம் 40 டிகிரி செல்சியசைக் கடந்திருக்கிறது.
தென்கொரியாவின் பல நகரங்களில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்குமேல் உயர்ந்திருக்கிறது.
இன்று 20க்கும் அதிகமான பகுதிகளில் அவசரநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
38 டிகிரி செல்சியஸ் வெப்பம் உணரப்படும் இடங்களில் அந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்லவேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டது.