உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு, மெஸ்ஸி முதன்முறையாக மீண்டும் களமிறங்கியுள்ளார்.
MLS தொடரில் கொலம்பஸ் அணிகளுக்கெதிரான போட்டியில் இன்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி களமிறங்கினார்.
போட்டியின் இரண்டாம் பாதியில் மாற்று வீரராகக் களம் கண்ட அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கு, கோல் அடிக்க சில வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதை கோலாக மாற்ற முடியாமல் போனது.
மழை காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய இந்த போட்டியில், மியாமி அணியின் லூயிஸ் சுவாரெஸ் 16ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார்.
தொடர்ந்து, மியாமி அணியின் கேசிமிரோ தவறுதலாக அடித்த கோல் மூலம் கொலம்பஸ் அணி 1-1 என சமன் செய்தது.
பின்னர், நோவா ஆலன் கோல் அடிக்க, மியாமி அணி 2-1 என முன்னிலை பெற்றது.
இருப்பினும், போட்டியின் 84ஆவது நிமிடத்தில் கொலம்பஸ் அணி கோல் அடிக்க போட்டி 2-2 என சமநிலையில் நிறைவடைந்தது.
இதன் மூலம் தொடர்ச்சியான 6 போட்டிகளில் வெற்றி பெற்ற இன்டர் மியாமி அணியின் தொடர் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.