| நாள் | திங்கள்கிழமை |
|---|---|
| திதி | திரயோதசி மாலை 5.47 வரை பிறகு சதுர்த்தசி |
| நட்சத்திரம் | மூலம் பகல் 12.34 வரை பிறகு பூராடம் |
| யோகம் | அமிர்தயோகம் பகல் 12.34 வரை பிறகு சித்தயோகம் |
| ராகுகாலம் | காலை 7.30 முதல் 9 வரை |
| எமகண்டம் | காலை 10.30 முதல் 12 வரை |
| நல்லநேரம் | காலை 6.15 முதல் 7.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை |
| சந்திராஷ்டமம் | கிருத்திகை பகல் 12.34 வரை பிறகு ரோகிணி |
| சூலம் | கிழக்கு |
| பரிகாரம் | தயிர் |
மேஷராசி அன்பர்களே!
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங் கள் ஏற்படும்.
ரிஷபராசி அன்பர்களே!
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.தேவையான பணம் கையில் இருப் பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராதபடி பணிச்சுமை அதிகரிக்கக்கூடும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
மிதுனராசி அன்பர்களே!
இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை யால் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உற்சாகம் தரும்.
கடகராசி அன்பர்களே!
இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் வீட்டில் கலகலப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனை நடப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தேடிய பொருள் கிடைக்கக்கூடும்.
சிம்மராசி அன்பர்களே!
தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் சங்கடத்தைத் தரக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்படும்.
கன்னிராசி அன்பர்களே!
தந்தைவழி உறவுகளால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி அவர்களை உற்சாகப் படுத்துவீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் உண்டாகும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.
துலாராசி அன்பர்களே!
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நண்பர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வகையில் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
விருச்சிகராசி அன்பர்களே!
காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொண்டாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நண் பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், பணியாளர்க ளால் செலவுகளும் ஏற்படக்கூடும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மனச்சங்கடம் ஏற்படக்கூடும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
தனுசுராசி அன்பர்களே!
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்க மாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளால் தேவை யற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
மகரராசி அன்பர்களே!
தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக சில வேலைகளை எடுத்துச் செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்க டங்கள் ஏற்படக்கூடும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.
கும்பராசி அன்பர்களே!
தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக சில வேலைகளை எடுத்துச் செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்க டங்கள் ஏற்படக்கூடும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.
மீனராசி அன்பர்களே!
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும்.