எகிப்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இஸ்மாயிலியா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தரை மட்டத்திலிருந்து 5.47 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பல நகரங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்ட போதிலும், உயிர்ச் சேதமோ சொத்துச் சேதமோ எதுவும் பதிவாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.