டிஜிட்டல் கேமராக்களுக்கு இணையாக இந்த ஸ்மார்ட்போன் புகைப்படம் அமைந்துள்ளதாக விண்வெளி ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எவ்வித டிஜிட்டல் கேமராக்களும் இன்றி, சாதாரண ஸ்மார்ட்போன் மூலம் எடுக்கப்பட்ட பசிபிக் பெருங்கடலின் பிரமாண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாசாவின் இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான அனில் மேனன், விண்வெளி நிலையத்தின் கப்போலா கண்காணிப்பு பகுதியில் இருந்து பசிபிக் பெருங்கடலின் வியத்தகு காட்சியைத் தனது ஐபோன் மூலம் படம் பிடித்தார்.
அந்த புகைப்படத்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்தார்.
பசிபிக் பெருங்கடலின் மேல் உருவாகியுள்ள வலிமையான 'டால்பின் புயலின்' பிரமாண்ட தோற்றமும், மேகக் கூட்டங்களின் சுழற்சியும்
இந்த ஐபோன் கிளிக்கில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளன. டிஜிட்டல் கேமராக்களுக்கு இணையாக இந்த ஸ்மார்ட்போன் புகைப்படம் அமைந்துள்ளதாக விண்வெளி ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
நாசா சமீபகாலமாக விண்வெளி வீரர்கள் தங்களின் தனிப்பட்ட மொபைல் போன்களை விண்வெளி நிலையத்திற்கும், நிலவுக்கான ஆர்டெமிஸ் போன்ற பயணங்களுக்கும் எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது. விண்வெளியில் இருந்து பூமியின் அழகை எளிய முறையில் படம் பிடிக்கவும், உடனுக்குடன் பகிரவும் இத்தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது.