கேரளாவில் கனத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக அங்கு 15 பேர் மாண்டனர். ஏழு பேரைக் காணவில்லை.
கேரள மாநில முதலமைச்சர் V. D. சதீசன் மீட்பு நடவடிக்கை தீவிரம் அடைந்திருப்பதாகச் சொன்னார்.
கேரளா முழுதும் 316 நிவாரண முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. மழை; வெள்ளத்தால் இடம்பெயர்ந்த சுமார் 11,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.வெள்ள நீரை வடியவைக்கும் பணி நடைபெறுகிறது.
அடைமழை காரணமாக மாநிலம் நெடுகிலும் பல பள்ளிகள் மூடப்பட்டன. ஆசிரியர்களை வேலைக்கு எடுப்பதற்கான மாநில அளவு தேர்வை அரசாங்கம் ஒத்திவைத்தது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் கன மழை நிலச்சரிவை ஏற்படுத்தியது.
அதில் சிக்கி ஒரு தம்பதியும் அவர்களது 3 வயது மகனும் மாண்டனர்.