சிங்கப்பூரில் காணாமல்போய்க் கம்போடியாவில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்ட 20 வயதுப் பெண் தானே விருப்பப்பட்டு அங்குச் சென்றதாகக் கூறியுள்ளார்.
மோசடி அல்லது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட யாரும் தன்னை வற்புறுத்தவில்லை என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூரில் ஆயிஷா சிரேகர் (Aishah Siregar) செவ்வாய்க்கிழமை (28 ஜூலை) காணாமல் போனார்.
பள்ளிக்குச் செல்வதாகக் கூறிய அவர் கம்போடிய விமானத்தில் ஏறினார்.
மோசடிக்காரர்கள் அவரைக் கம்போடியாவுக்கு அழைத்திருக்கலாம் என்று அஞ்சிய குடும்பத்தார் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
கம்போடிய அதிகாரிகள் பின்னர் ஆயிஷாவைப் பாதுகாப்பாகக் கண்டுபிடித்தனர்.
சொந்த வாழ்க்கைப் பாதையைத் தேடுவதற்காகக் கம்போடியாவுக்குச் சென்றதாக அவர் சொன்னார்.
கம்போடியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரியவிருப்பதாகவும் ஆயிஷா கூறினார்.
குடும்பப் பிரச்சினைகளால் குடும்பத்தாருடன் தொடர்பை வெட்டிக்கொள்ள அவர் எண்ணியதாகக் கம்போடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.