"ஒவ்வோர் ஊழியரும் AI மூலம் பயனடைவது உறுதிசெய்யப்படும்"

சிங்கப்பூரில் ஒவ்வோர் ஊழியரும் AI தொழில்நுட்பத்தின்வழி பயனடைவதை உறுதிசெய்யவிருப்பதாக தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

காங்கிரஸின் தேசிய தினச் செய்தியை அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் இன்று வெளியிட்டார். CTC எனும் நிறுவனப் பயிற்சிக் குழு மானியத்தைப் பெற்ற திட்டங்களில் சுமார் 30 விழுக்காடு AI தொடர்பான திட்டங்கள் என்று கூறப்பட்டது.

மானியத்தின்மூலம் இதுவரை 15,000 ஊழியர்கள் பயன்பெற்றுள்ளனர்.

ஊழியர்களின் வயது அல்லது வேலைத் தகுதி எதுவாக இருந்தாலும் AI மூலம் அவர்கள் பலன்பெற உதவி வழங்கப்படும் என்று தேசிய தினச் செய்தியில் குறிப்பிடப்பட்டது. ஊழியர்களின் AI திறன்களை வளர்க்கத் தொழிலாளர் இயக்கம், அரசாங்கத்துடனும் முதலாளிகளுடனும் சேர்ந்து பணியாற்றும் என்று திரு இங் தெரிவித்தார்.

Bootstrap