வல்வைப் படுகொலையின் 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று (2) நடைபெற்றது.
வல்வெட்டித்துறை நகரில், தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசியப் பேரவையினரின் ஏற்பாட்டில் வல்வைப் படுகொலையின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நடத்தப்பட்டது.
1989.08.02 அன்று இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது பொதுமக்களில் 72 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
படுகொலை செய்யப்பட்ட 72 பேரின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து பொதுச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.