எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டொலர் குறைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஒரு மாதத்தில் தனது சொத்து மதிப்பில் 600 பில்லியன் அமெரிக்க டொலரை இழந்துள்ளார்.

SpaceX மற்றும் Tesla நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியே இதற்கு காரணம்.

ஜூன் 16 அன்று SpaceX பங்குகள் IPO-வில் மிகப்பெரிய வரலாற்றை படைத்தன. IPO விலை 135 டொலராக இருந்த நிலையில், பங்குகள் 150 டொலருக்கு பட்டியலிடப்பட்டன. முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் பங்குகள் 202 டொலர் வரை உயர்ந்தன. இதனால், மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆனார். ஆனால், அந்த பெருமை நீடிக்கவில்லை. தற்போது SpaceX பங்குகள் 108 டொலர் வரை சரிந்துள்ளன.

இதனால், மஸ்கின் செல்வம் 1.33 டிரில்லியன் டொலரிலிருந்து 684 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி, மற்ற பில்லியனர்களின் மொத்த செல்வத்தை விட அதிகம்.

மேலும், Tesla நிறுவனத்தின் பங்குகளும் 17 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. இரண்டாம் காலாண்டு (Q2) முடிவுகளில், Tesla எதிர்பார்த்த லாபத்தை எட்டவில்லை. AI மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் அதிக முதலீடு செய்ததால், செலவுகள் அதிகரித்தன. வாகன விற்பனை அதிகரித்திருந்தாலும், குறைந்த விலை மற்றும் குறைந்த regulatory credits காரணமாக லாபம் குறைந்தது.

இவ்வளவு பெரிய இழப்புகளுக்கு மத்தியில், மஸ்க் தனது AI, சுய இயக்க வாகனங்கள், ரோபோடாக்ஸி, மனித வடிவ ரோபோட்கள் போன்ற திட்டங்களில் 25 பில்லியன் டொலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

இது கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம். மஸ்கின் செல்வம் குறைந்தாலும், அவர் இன்னும் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையைத் தக்க வைத்துள்ளார்.

Bootstrap