தமிழ்நாட்டு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட திருக்குறள் வைரலாகி வருகிறது.
தஞ்சையில் நேற்று திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ், "புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல், அறங்கூறும் ஆக்கம் தரும்”
என திருக்குறள் பதிவிட்டுள்ளார்.
அதாவது நேரில் ஒரு விதமாகவும், மறைவில் வேறொரு விதமாகவும் தீமையாகப் பேசுவதை விட இறப்பதே மேல் என்ற பொருள் கொண்ட திருக்குறளை அவர் பதிவிட்டுள்ளார்.