வசூலில் புதிய சாதனை படைத்த ‘ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே’

அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியான முதலாவது வார இறுதியில் ‘ஸ்பைடர் மேன்பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) திரைப்படம் 360 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக வசூலித்து, சாதனையைப் படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ (Avengers: Endgame) திரைப்படம் ஈட்டிய 357 மில்லியன் அமெரிக்க டொலர்களே அதிகபட்ச சாதனையாக இருந்தது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக அளவில், ‘ஸ்பைடர் மேன்’ வரிசையின் இந்த புதிய திரைப்படம் 932 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்துள்ளது.

இருப்பினும், இது ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தின் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் உலகளாவிய சாதனையை விட சற்று குறைவாகும்.

 

Bootstrap