எப்படி நாகரீகமாக பேச வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் உதயநிதி கற்று கொள்ள வேண்டும்: தவெக

கோவையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து அதிரடியான மற்றும் கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் எந்தவொரு விவகாரத்திலும் சம்பந்தமில்லாமல் திரைத்துறை பிரபலங்களைப் பற்றியும், காவிரி விவகாரம் குறித்தும் மிகவும் பொறுப்பற்ற முறையில் பேசி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

செய்தியாளர் சந்திப்பில் மேலும் பேசிய அவர், "உதயநிதி ஸ்டாலின் இதுபோன்று அவதூறாக பேசினால், சட்டம் சும்மா இருக்குமா? அவரை சட்டப்படிதான் கைது செய்துள்ளனர், தவறு செய்தால் கைது செய்யாமல் என்ன செய்வார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

த்ரிஷா போன்ற பிரபல நடிகைகள் தங்கள் சொந்த வேலையை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார்கள், ஆனால் திமுகவினருக்கு தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் வெறி இன்னும் அடங்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போதுமே நாகரிகமான அரசியலை மேற்கொண்டவர், அவர் இறந்தவர்களைக்கூட ஒருபோதும் அவதூறாக பேசியதில்லை என்று புகழேந்தி சுட்டிக்காட்டியதோட், அவரிடம் உதயநிதி எப்படி நாகரீகமாக பேச வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

சட்டம் தன் கடமையைச் சரியாக செய்து வருவதால் உதயநிதி ஸ்டாலின் கைது நூற்றுக்கு நூறு சரியானதுதான் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என்றும் புகழேந்தி எச்சரித்துள்ளார். தவெக தரப்பிலிருந்து வந்துள்ள இந்த அதிரடி பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Bootstrap