முதல்வர் விஜயை நடிகை திரிஷாவுடன் இணைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது தவெகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காலை அவர் கைது செய்யப்பட்டு போலீசார் அவரை போலீஸ் வாகாந்த்தில் தஞ்சாவூருக்கு கூட்டி சென்றனர்.
உதயநிதியின் கைதுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்லும் வழியெங்கும் திமுகவின் போராட்டம் நடத்தினார்கள். ஒரு பக்கம் தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் பஸ் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவாலயம் சென்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்தார்.
ஒருபக்கம் உதயநிதியை கைது செய்யக்கூடாது என வலியுறுத்தி திமு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று மதியம் 2.15 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது உதயநிதியை விசாரணைக்கு மட்டுமே அழைத்து செல்கிறோம்.. கைது செய்ய மாட்டோம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலைக்குள் உதயநிதியை விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ‘உதயநிதியை இன்று விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவு தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி.. ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்.. தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுப்படுத்தும்’ என தெரிவித்திருக்கிறார்.