யாழில் தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்திற்கு உட்பட்ட நடத்துனர் ஒருவர் பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவன் ஒருவனுக்கு முழு ஆளிற்கான பணம் அறவீடு செய்ததற்காக ஒரு வார பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குடத்தனையிலிருந்து மருதங்கேணி சென்ற 10 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு வடமராட்சி கிழக்கு தனியார் போக்கு வரத்து சங்கத்தினதும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினதும் கட்டுப்பாட்டை மீறி வயது வந்தோர்களுக்கான முழுத் தொகை பணம் அறவிட்டதற்காக குறித்த சிறுவனின் தந்தை வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்திடம் முறையிட்டார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சங்கம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த பேருந்து நடத்துனர் சிறுவனுக்கு முழு கட்டணம் அறவிடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஒரு வாரம்நடத்துனர் பணியில் ஈடுபடுவதற்கு தடை விதித்துள்ளது.

இதேவேளை இலங்கை போக்குவரத்துச் சபையினுடைய பேருந்தானது மருதங்கணியிலிருந்து குடத்தனை செல்வதற்காக முழு ஆளுக்கான தொகையாக 108 ரூபாவும், சிறுவர்களுக்கு 54 ரூபாவும் அறவிட்டிருந்தது. ஆனால் தனியார் போக்குவரத்து சேவை பேருந்துகள் இருவருக்கும் அதே அளவு தூரத்திற்கு 140 ரூபாய் வீதம் அறவிட்டுள்ளது.

Bootstrap