மதுவை விட்டு விலகும் தாய்லந்து மக்கள்

தாய்லந்தில் மில்லியன் கணக்கானோர் மூன்று மாதங்களுக்கு மதுபானம் அருந்துவதை நிறுத்துவதாகச் சபதம் எடுத்துள்ளனர்.

சாமுட் சக்கோன் (Samut Sakhon) வட்டாரத்தின் பௌத்த ஆலயம் ஒன்றில் மக்கள் கூடி சபதம் எடுத்தனர்.

கௌ ஃபான்ஸா (Khao Phansa) எனப்படும் பெளத்த தினத்தில் இந்த மது அருந்தா இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.

வாசானா நாக் உம்மா (Wassana Nak-umma) என்ற பெண் மூவாண்டாக அந்த நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறார்.

அவருக்கு வயது 42.

இல்லத்தரசியான அவர் அதிகமாக மது அருந்தினார்.

பிள்ளைகளுக்கு அது தொல்லையாக அமைந்தது.

2024ஆம் ஆண்டு அவர் மதுவை விட்டு விலகும் இயக்கத்தில் சேர்ந்தார்.

அவர் முழுமையாக மது அருந்துவதை நிறுத்தாவிட்டாலும் அவர் அளவுடன் மது அருந்தத் திட்டம் உதவியது.

தாய்லந்தில் 2003ஆம் ஆண்டில் இயக்கம் முதன்முதலில் அறிமுகமானது.

அதில் 8 மில்லியனுக்கும் அதிகமானோர் சேர்ந்தனர்.

அதிகம் மது அருந்தும் நாடுகளின் பட்டியலில் ஆசியாவில் தாய்லந்துக்கு மூன்றாவது இடம்.

Bootstrap