செங்கடலில் தாக்கப்பட்ட இந்தியக் கப்பல் மூழ்கியது.
கப்பல் ஊழியர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டதாக ஏமனின் கடலோரக் காவற்படை தெரிவித்தது.
குறித்த கப்பல் மூழ்குவதற்கு ஏமனைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலே காரணம் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியது.
குறித்த Fwpj;j MSV Faize Noore Oliya கப்பலில், 13 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்,ஒருவர் ஏமனைச் சேர்ந்தவர்.
ஹொதைதா துறைமுக நகருக்குத் தெற்கே கப்பல் தாக்கப்பட்டதாக ஏமனி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இந்தியக் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் குறித்த தாக்குதல் நடைபெற்றதை உறுதி செய்தார்.
குறித்த தாக்குதலிற்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
அந்தப் பகுதியில் வணிகக் கப்பல்கள் குறிவைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
செங்கடலில் சவுதி அரேபியாவின் கப்பல்களை முற்றுகையிடுவதாக ஹௌதி கிளர்ச்சிக் குழு சென்ற மாதம் (ஜூலை) கூறியது.
இன்னொரு பக்கம் ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டது.
உலக அளவில் கப்பல் போக்குவரத்துத் தொடர செங்கடலில் உள்ள சவுதி அரேபியாவின் யான்பு துறைமுகம் பெரிதும் உதவுகிறது.