வீட்டு கனவுக்கு வித்திட்டது தமிழக அரசு - பாதீட்டில் மாபெரும் திட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் 2026–2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் , பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான வீடுகளை வழங்கும் நோக்கில் "அனைவருக்கும் தரமான வீடு" திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக 1,253 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் மூலம், 24,313 அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினரின் நலனைக் கருத்தில் கொண்டு, 14,194 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து குடியிருப்புகளும் அவசியமான அடிப்படை வசதிகளுடன், தரமான முறையில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap