ஸ்பெயினின் மாட்ரிட் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி நிதி உதவி வழங்கியுள்ளார்.
மாட்ரிட் பகுதியில் கடந்த ஜூலை 10-23 முதல் அதிகபட்சமான வெப்ப அலையினால் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஜூலை 24இல் 65 கி.மீ/ மணி வேகத்தில் காற்று வீசி இரண்டு தீ முகப்புகள் ஒன்றாக இணைந்து 50 கி.மீ/ மணி வேகத்தில் காட்டுத் தீயாக பரவியது.
இந்தக் கடுமையான காட்டுத்தீயினால் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதனால், 84,000 ஏக்கர் நிலப்பரப்பு கருகின. இந்தப் பாதிப்பினால் 56,500 பேர் கட்டாய இடம்பெயர்வுக்கு தள்ளப்பட்டனர்.
இந்தப் பகுதிகளில் 27,000 பேர் வீடுகளில் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் காட்டுத்தீயினால் பல்வேறு கட்டடங்களும் சேதமாகின.
இந்த நிலையில், மெஸ்ஸி 80,000 யூரோ நிவாரண நிதியாக அளித்துள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (39 வயது) பார்சிலோனா அணியில் பல ஆண்டுகள் விளையாடியுள்ளார்.
ரியல் மாட்ரிட் அணிக்கும் பார்சிலோனா அணிக்கும் எப்போதுமே போட்டி இருக்கும். ஆனால், பகைமையைக் காட்டாமல் அவர் விளையாடாத பகுதிக்கும் நன்மை செய்துள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.