'ஹீட்டட் ரைவல்ரி' (Heated Rivalry) தொடரின் கனாடியன் டயர் பைப் பை மோகம்: ரசிகர்களிடையே வைரல்

பிரபல கனாடியன் தொடரான 'ஹீட்டட் ரைவல்ரி' நாடகத் தொடரின் நடிகர் ஹட்சன் வில்லியம்ஸ் (Hudson Williams), கனாடியன் டயர் (Canadian Tire) நிறுவனத்தின் $1.99 பெறும்படியான மறுபயன்பாட்டு பையை (reusable bag) ஏந்திச் சென்ற படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஹீட்டட் ரைவல்ரி' தொடரின் முன்னணி நடிகரான ஹட்சன் வில்லியம்ஸ், டொராண்டோ வீதிகளில் தனது சக நடிகர் கானர் ஸ்டோரியுடன் (Connor Storrie) நடந்து சென்றபோது, கனாடியன் டயர் கடையில் விற்கப்படும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணம் கொண்ட மலிவு விலை பையை ($1.99) எடுத்துச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.

டிக் டாக், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் திரெட்ஸ் (Threads) போன்ற தளங்களில் ரசிகர்கள் இந்தப் பையைத் தொடரின் "அதிகாரப்பூர்வமற்ற விளம்பரப் பொருள்" (unofficial merch) என நகைச்சுவையாகக் கூறித் தேடிப் பிடித்து வாங்கி வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ரசிகர்களும் கனாடியன் டயர் கடை மற்றும் இந்தப் பையைப் பற்றி ஆர்வம் காட்டி வரும் நிலையில், கனடா ரசிகர்கள் அதை அவர்களுக்கு அனுப்பி வைக்க முன்வந்துள்ளனர்.

அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரசிகர்கள் தொடரைக் குறிப்பிட்டு வேடிக்கையான கருத்துகளை (reviews) பதிவிட்டு வருகின்றனர்.

கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள பெரும்பாலான கிளைகளில் இந்தப் பை முற்றிலும் விற்பனையாகிவிட்டது (Sold out).

வழக்கமாக விற்கப்படும் அளவை விட இந்தப் பையின் விற்பனை 30 மடங்கு உயர்ந்துள்ளதாக கனாடியன் டயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

'ஹீட்டட் ரைவல்ரி' தொடரின் 2-வது சீசனுக்கான படப்பிடிப்பு கனடா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக, தொடரில் தோன்றிய ஒரு குளிர்கால ஆடை (fleece) $356 விலையில் வெளியாகி வெறும் 10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Bootstrap