இத்தாலியில் ஆபத்தில் இருந்த பெண்ணை காப்பாற்றிய இலங்கையர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மிலான் நகரில் கட்டட பராமரிப்பாளராக பணியாற்றி வரும் 52 வயதான இலங்கையர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் 22 வயதான பெண்ணை நபர் ஒருவர் தாக்குவதற்கு துரத்தியுள்ளார்.
இந்நிலையில் பணியில் இருந்து இலங்கையரிடம் சென்ற பெண் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் விரைந்த செயற்பட்ட இலங்கையர், தாக்க வந்த நபரை விரட்டியுள்ளார்.
இதனையடுத்து பாதிகப்பட்ட பெண்ணும் அங்கிருந்து சென்ற நிலையில், சிறிது நேரத்தில் கத்தியுடன் வந்த சந்தேக நபர் இலங்கையர் மீது சரமாரியாக தாக்குல் மேற்கொண்டுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த இலங்கையரின் பணப் பையையும் களவாடிய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தகவலறிந்த பொலிஸார் உடன் விரைந்து செயற்பட்டு கார்ப்போ புவெனோஸ் அய்ரெஸ் வீதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட இலங்கையர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.